இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு இடதுசாரிகளின் கவலைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயமும் இல்லை என்று கபில் சிபல் கூறியுள்ளார்!
சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் இந்தியா டுநைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை கபில் சிபல், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகளை கருத்தில் கொள்வது என்று ஒப்புக்கொள்வதானாலேயே அதற்கு அரசு கட்டுப்பட்டதாகிவிடாது என்று கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள கபில் சிபல், அவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் குறித்து அவர்களிடமே பேசுவோம். அதன்பிறகு இறுதி முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் எவ்வளவு விரைவில் நடைமுறைக்கு வருகிறதோ அவ்வளவிற்கு அது நல்லது என்று கபில் சிபல் கூறினார்.