2005, 2006 ஆம் ஆண்டுகளில் மட்டும் காஷ்மீர் மாநிலத்தி்ல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 426 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
2005 ஆம் ஆண்டு 917 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் 556 பேரும், பாதுகாப்புப் படை வீரர்கள் 244 பேரும் உயிரிழந்ததாகக் கூறியுள்ள அதிகாரிகள், 2006 ஆம் ஆண்டில் 591 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டும், 410 பொதுமக்களும், 182 வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக கடந்த 2005, 2006 ஆம் ஆண்டுகளில் 1,508 தீவிரவாதிகள் கொல்லப்பட்டும், பொதுக்கள் 996 பேரும், பாதுகாப்புப் படை வீரர்கள் 426 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 426 பாதுகாப்புப் படை வீரர்களில் காவல் துறையினர், சிறப்புக் காவற்படையினர், பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோரும் அடங்குவர்.
இவ்விரு ஆண்டுகளில் விசாரணைக் காவலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.