இந்திய அணு சக்தி சட்டத்தின் படி, அணு மின் சக்தி உற்பத்தியில் தனியாருக்கு இடமளிக்கும் சாத்தியம் இல்லை என்று பிரதமர் அலுவலக அமைச்சர் பிரித்திவிராஜ் சவான் கூறியுள்ளார்!
மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அணு மின் உற்பத்தியில் தனியாருக்கு இடமளிப்பது தொடர்பாக இன்றுள்ள சூழ்நிலையில் மறுபரிசீலனைக்கு இடமுள்ளது என்று கூறினார்.
ஆனால், அணு மின் சக்தி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களையும், கருவிகளையும் தனியார்களிடம் இருந்து தயாரித்து பெற்றுக்கொள்ள எந்தக் கொள்கை மாற்றமும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
1962 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அணு சக்தி சட்டத்தை பரிசீலனை செய்வது குறித்து அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையில் 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழு, 1998 ஆம் ஆண்டு தனது பரிந்துரையை அளித்துள்ளது என்று கூறினார்.
அக்குழு அளித்த பரிந்துரை என்ன என்பது கேட்டதற்கு, அது தேச பாதுகாப்பு மற்றும் அணு சக்தி முறைபடுத்தும் அமைப்பு தொடர்பானது என்று மட்டும் பிரித்திவிராஜ் கூறினார்.