எதிர்ப்பில் மாற்றமில்லை : மார்க்சிஸ்ட்!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (16:19 IST)
இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு குறித்து தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளை முறையாக மதிப்பீடு செய்து பதிலளிக்காத வரை அதனை எதிர்க்கும் தங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது!

அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியார்ளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யச்சூரி இவ்வாறு கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான 123 ஒப்பந்தம் குறித்து ஆராய அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ள குழு பற்றிய எந்த விவரமும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும், இப்பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று யச்சூரி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்