123 ஒப்பந்தம் : பிரதமருடன் பிராகாஷ் காரத் சந்திப்பு!

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (13:41 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் ஏற்பட்டுள்ள வேறுபாட்டிற்கு தீர்வு காணும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்!

இன்று காலை பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின் போது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உடனிருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று அவரை பிரகாஷ் காரத் சந்தித்துள்ளார்.

அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக உருவாகியுள்ள வேறுபாடுகளுக்கு தீர்வு காண பிரதமரும் பிராகாஷ் காரத்தும் முயற்சித்து வருவதாக பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சயா பாரூ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்