புதுச்சேரி அருகே விபத்து : 3 பேர் பலி

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (13:21 IST)
புதுச்சேரி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புதுச்சேரியில் இருந்து மையல் நோக்கி மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசனூர் பகுதியில் வந்து கொண்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்