பீகாரில் வெள்ளம் : 5,000 கிராமங்கள் துண்டிப்பு

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (10:25 IST)
பீகார் மாநிலத்தில் ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம் 4,800 க்கும் மேற்பட்ட கிராமங்களை சூந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

தர்பங்கா, மதுபானி மாவட்டங்கள் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள ஏராளமான மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய விமானப் படையினர் விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

சில மாவட்டங்களில் வெள்ளப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக ராணுவம் வரவழைக்கப்படுள்ளது. புர்கிகான்டாக், பாக்மதி, அத்வரா, கோசி, மகானந்தா, ஆகிய ஆறுகளில் சில இடங்களில் வெள்ளம் அபாய கட்டத்திற்கு மேல் சென்று கொண்டிருப்பதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரூ. 93 கோடி மதிப்புள்ள 9.18 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்றும், 70,000 மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ 12 கோடி மதிபுள்ள அரசு சொத்துக்களும் சேதமடைதுள்ளதும் தெரியவந்துள்ளது.

பீகார் ஆற்றில் கரைபுரண்டுடோடும் வெள்ளம் 4,800 க்கும் மேற்பட்ட கிராமங்களை சூந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பார்வையிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்