நெஞ்சு வலிப்பதாக சஞ்சய் தத் புகார்!

Webdunia

சனி, 4 ஆகஸ்ட் 2007 (12:28 IST)
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தனக்கு நெஞ்சு வலிப்பதாக புகார் கூறியுள்ளதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறைத்துறை முடிவு செய்துள்ளது!

எரவாடா சிறையில் அடைத்தது முதல் நேற்று இரவும், நேற்று முன்னாள் இரவும் சஞ்சய் தத் தூக்கமின்றி கழித்ததாகவும், தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறின.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவரான சஞ்சய் ததநெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார் என்றும், அவரை சாசூன் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவச் சோதனை நத்தவுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுக்கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்