ஜார்கண்டில் மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூடு 12 பேர் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை பேருந்து மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 28 ஆம் தேதி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தை மாவோயிஸ்ட் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் பாகுவ காடி என்ற இடத்திற்கு அகே வந்து கொண்டிந்த பேருந்து மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதில், பேருந்தில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படுகாயம் அடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்