கோவாவில் காங்கிரஸ் ஆட்சி தப்பியது

Webdunia

செவ்வாய், 31 ஜூலை 2007 (11:22 IST)
கோவாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.

காங்கிரஸ் ஆட்சி வெற்றிபெற்றதாக அறிவித்த அவைத் தலைவர், ஜனநாயக படுகொலை செய்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.

கோவா மாநில ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்ததை அடுத்து பதவி ஏற்ற 49 நாட்களில் கவிழும் நிலையில் இருந்த காங்கிரஸ் ஆட்சி தப்பியது.

இதையடுத்து கோவாவில் கடந்த ஒரு வாரமாக இருந்துவந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த சிறிய மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் 16 முதலமைச்சர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்