அமைச்சரவையில் சேர மாட்டேன் : கனிமொழி

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (11:24 IST)
மத்திய அமைச்சரவையில் தற்போது சேரமாட்டேன் என்றும், அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் வரை பொறுத்திருப்பேன் என்றும் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பெற்றுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் மகளும், கவிஞருமான கனிமொழி தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் பொறுப்பு ஏற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், இதில் தனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை என்றும் கூறினார்.

பெண்களுக்கு கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் வழங்குவதுடன் அவர்களுக்கு உள்ள உரிமைகளை தெரியப்படுத்தும் வகையில் அவர்களை மாற்றுவது தற்போது அடைப்படை தேவையாகும் என்று கூறினார்.

மத்திய அமைச்சரவையில் தற்போது சேரமாட்டேன் என்றும், அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்