கோவாவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (11:57 IST)
கோவாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சில சுயேட்சைகள் விலக்கிக் கொண்டதால் அரசுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ், சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திகாம்பர் காமத் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து 49 நாட்களே ஆன நிலையில், அரசுக்கு ஆதரவு அளித்த சில சுயேட்சைகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளன. மேலும், மஹாராஷ்டிரா கோமான்டக் கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தனக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திகாம்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமையை கோரப்போவதாக எதிர் கட்சியான பாஜக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்