டெல்லி - உத்திரகாண்டில் நிலநடுக்கம்

Webdunia

திங்கள், 23 ஜூலை 2007 (12:38 IST)
தலைநகர் டெல்லியிலும், உத்திரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசியிலும் இன்று அதிகாலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 4.9 புள்ளிகளாக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம், உத்திரகாசிற்கு வடக்கே உள்ள கௌமுக் என்ற டத்தில் மையம் கொண்டு தாக்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.34 மணிக்கு ஒரு முறையும், 4.43 மணிக்கு மற்றொரு முறையும் நிலநடுக்கம் தாக்கி உள்ளது. உத்திரகாசி, டேராடூம், ஹரித்துவார், வித்ரோகார், ஷமோலி ஆகிய இடங்களையும் இந்த நில நடுக்கல் உலுக்கி உள்ளது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் உத்திரகாசியில், 1991 அம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ( பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்