குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதீபா வெற்றி

Webdunia

சனி, 21 ஜூலை 2007 (18:07 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி , இடது சாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 24 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.

ஆங்கில எழுத்து வரிசையின்படி மாநில வாரியாக பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. அதன்படி ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 223 பேரவை உறுப்பினர்களின் முதல் வாக்குகளை பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அசாம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 92 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளையும், ஷெகாவத் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளனர். 3 வது அணியில் இடம் பெற்றுள்ள அசாம் கன பரிஷத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 58 உறுப்பினர்கள் வாக்குகளபிடதீபா பாட்டீலுக்கும், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் வாக்கஷெகாவத்திற்கும் கிடைத்துள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 8 ஆகும்.

டெல்லியில் பதிவான வாக்குகளில் பிரதீபா 50 வாக்குகளையும், ஷெகாவத் 19 வாக்குகளையும் பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு 58 ஆகும். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் வேட்பாளர் பிரதீபா முன்னிலை வகித்து வந்தார்.

அனைத்து மாநில வாக்குகளும் எண்ணப்பட்டத்தில் பிரதீபா பாட்டீல், ஷெகாவத்தை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 24 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்