123 ஒப்பந்தம் : இறுதிகட்டத்தில் பேச்சுவார்த்தை - பிரதமர்!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (13:57 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உருவாக்க வேண்டிய 123 ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உள்ள தடைகளுக்கு தீர்வு காண தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையிலான இந்திய அரசுக் குழு, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கீட்ஸ் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று கேட்டதற்கு, அது குறித்து தற்பொழுது கூறஇயலாது என்று பிரதமர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்