காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு : 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (21:09 IST)
காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்!

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து யூரி பகுதியில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் இந்த ஊடுருவல் முயற்சி நடந்ததாகவும், அதனை இந்திய ராணுவத்தின் ராஜ்புத் படையின் 23வது படை வீரர்கள் தடுத்து முறியடித்ததாகவும் ஸ்ரீநகரில் பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்