மும்பை குண்டு வெடிப்பு: கக்டேவிற்கு ஆயுள் தண்டனை

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (16:10 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஷ் கக்டேவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,77.00 அபராதமும் விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

1993 ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதி மன்றம் அறிவித்தது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 100 பேரில் 76 பேருக்கு இதுவரை தண்டைனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 பேருக்கு இன்று முதல் தண்டனை வழங்கப்படும் என தடா நீதிமன்றம் அறிவித்தது.

குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஷ் கக்டேவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ 2,77,000 அபராதமும் வழங்கி தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோடே இன்று தீர்ப்பு வழங்கினார். மத்திய மும்பையில் உள்ள தான்ஜி சாலையில் இரு சக்கர வாகன வெடி குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தண்டனை பெற்றுள்ள இம்தியாஷ் கக்வே எய்ட்ஸ் நோயாளி என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்