123 ஒப்பந்தம் : மன்மோகன் - புஷ் ஆலோசனை

Webdunia

வியாழன், 12 ஜூலை 2007 (11:34 IST)
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ்சுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்படிக்கையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பாக அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தலைமையிலான குழுவும், இந்திய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் தலைமையினால குழுவும் பேச்சு வார்த்தை நடத்தின.

கடந்த மாதம் டெல்லியில் 3 நாட்கள் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் 123 ஒப்பந்தம் உருவாகுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இப்பிரச்சனைகளில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவது குறித்து, பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும்,அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லியும் வருகிற 16ம் தேதி வாஷிங்டனில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபரை புஷ்சுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் 123 ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக பிரதமரின் செய்தி ஆலோசகர் சஞ்சப் பாரு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்