ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடைக்காக தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உததரவிட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டபேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை,கிருஷ்ணகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இது விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
ஜெயலலிதா மீது வழக்கு தொடர சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் அணையம் ஆணைபிறப்பித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பரங்கிப்பேட்டை மற்றும் புதுக்கோட்டை நீதிமன்றங்களில் ஜெயலலிதா மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கிற்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கொண்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.