குஜராத்தில் வெள்ளம்: 400 பேர் மீட்பு

Webdunia

செவ்வாய், 10 ஜூலை 2007 (12:52 IST)
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400 பேரை ராணுவனம் மீட்டுள்ளது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் நர்மதா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டதால், அஹமதாபாத், வதோரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட ராணுவம் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில்,அஹமதாபாத் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழையினால் பாவ்தா என்ற கிராமத்தை வெள்ளம் சூந்தது.இதையடுத்து அங்கு வெள்ளத்தில் சிக்கிய சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்களை ராணுவத்தினர் மீட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் தாரா தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தஸ்ரோய், தோல்கா பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்