பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Webdunia

திங்கள், 9 ஜூலை 2007 (12:13 IST)
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வருகிற 11 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னாள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்பேசி இணைப்பு வழங்கத் தேவையான கருவிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டதாகவும், ஆனால், செல்பேசிக் கருவிகளை வாங்குவதற்கான ஆணையை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

செல்பேசிக் கருவிகள் வாங்காததால் ரூ.110 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த இழப்பு கணக்கை காண்பித்து பி.எஸ்.என்.எல். எனும் பொதுத்துறை நிறுவனத்தை மூடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனை கண்டித்து வருகிற 11 ஆம் தேதி ( புதன் கிழமை ) நாடு முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்