ஹெச்ஐவி பாதிப்பு பாதியாக குறைப்பு : அன்புமணி ராமதாஸ்!

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (16:00 IST)
கடந்த ஆணடை விட இந்தாண்டு ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய ஹெச்.ஐ.வி. கட்டுப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உலகிலேயே தென் ஆப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், நைஜீரியா 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் இருப்பதாக தெவித்தார்.

இந்தியாவில் 2.5 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2011 ஆம் ஆண்டில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு 5.2 மில்லியன் பேர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இந்தாண்டு அது பாதியாக குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்