நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டிடும் தம் மீது எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாகவும், அதில் உண்மை எதுவும் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் தம் மீதான குற்றச்சாட்டுகள் தம்மை இழிவு படுத்தும் விதமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமது மனு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பல ஆண்டு கால பொதுவாழ்க்கையில் தாம் நேர்மையாக செயல்பட்டிருப்பதாக பிரதீபா பாட்டீல் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.