மும்பையில் மழை : 19 பேர் பலி

Webdunia

ஞாயிறு, 1 ஜூலை 2007 (12:07 IST)
மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ள நிலையில், மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளை மேற்கொளள துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை மும்பை நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மழை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.

மும்பையில் இருந்து கோவா, பெங்களூரு, சென்னை வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் பாதைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்து சேவையும் முற்றிலும் தடைபெற்றுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவை 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளை மேற்கொள் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்