குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (17:02 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, வருகிற ஜூலை 19 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாக ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இதுவரை 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. பிரதீபா பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரின் வேட்புமனுக்கள் தவிர மற்றவை நிராகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, சென்னையில் நாளை நடைபெறும் மகளிர் பேரணியில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்கிறார். இதையடுத்து, அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்