ரூபாயின் பணவீக்கம் 4.03 விழுக்காடாக குறைந்தது!

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (16:54 IST)
உணவுப் பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் பணவீக்க விகிதம் 0.25 விழுக்காடு குறைந்துள்ளது!

ஜூன் 9 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.28 விழுக்காடாக இருந்த ரூபாயின் பணவீக்கம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.03 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதே வாரத்தில் கடந்த ஆண்டு 5.5 விழுக்காடாக பணவீக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மைய வங்கியின் (ஆர்.பி.ஐ.) நடவடிக்கைகளினால் ரூபாயின் வாங்கும் சக்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கடந்த புதன்கிழமை லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், பணவீக்கம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் வட்டி விகிதம் எதனால் உயர்த்தப்பட்டு வருகிறது என்று காரணம் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

அனைத்துப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு 211.8 புள்ளிகளில் இருந்து 0.05 விழுக்காடு குறைந்து 211.7 ஆக குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக் குறியீடு 220.1-ல் இருந்து 219.8 ஆக குறைந்துள்ளது. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்