குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் நடவடிக்கையின் ஒரு அங்கமாவதனால், குடியரசுத் தலைவர் மாளிகையின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவே மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தான் மறுத்துவிட்டதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் இதழியலாளர்களுடன் பேசிய கலாம், "கடந்த 5 ஆண்டு காலத்தில் ராஷ்ட்ரபதி பவனை மக்கள் பவனாக மாற்றியுள்ளோம். இன்று அது மக்கள் பவனாகக் காட்சி அளிக்கிறது. தேசத்திற்கு அது ஒரு உதாரணமாகத் திகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதன் பெருமைக்கு களங்கும் ஏற்படக்கூடாது. அதனால்தான் போதும் என்கின்ற முடிவிற்கு வந்தேன்" என்று கூறியுள்ளார்.
நிச்சயமானால் மீண்டும் போட்டியிடத் தயார் என்று கூறியதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவியை தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ் வெளிப்படையாக கடும் குற்றச்சாற்றை கூறியுள்ள நிலையில் அப்துல் கலாம் இவ்வாறு கூறியுள்ளார்.