குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதீபா பாட்டீல் வேட்பு மனு தாக்கல்!

Webdunia

சனி, 23 ஜூன் 2007 (13:28 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டில் இன்று வேட்பு மனாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய குற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியும், மக்களவை தலைமை பொதுச் செயலருமான ஆசாரியிடம் அளித்தார்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், ராமவிலாஸ் பாஸ்வான், ராமதாஸ் அத்வாலே ஆகியோர் உடனிருந்தனர்.

இடதுசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸகுப்தா, அபனி ராய் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், அர்ஜூன் சிங், ஏ.கே. அந்தோணி, டி.ஆர்.பாலு, சுசில் குமார் ிண்டே மற்றும் மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்