அசாமில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

Webdunia

சனி, 23 ஜூன் 2007 (12:04 IST)
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தில் மசூதி முன்பு இன்று காலை உல்பா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதில் 4 பேர் பலியாயினர்.20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாக்கொவா பகுதியில் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் மசூதி ஒன்றும் உள்ளது. இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மசூதி முன்பு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மசூதி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகன வெடிகுண்டு வெடித்ததாகவும், இந்த கொண்டு வெடிப்பில் அங்கு இருந்த வானங்கள் பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கவுகாத்தி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜன் சிங் தெரிவித்தார்.

படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மார்வரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக மேலும் கூறினார்.

ஆசிய கிராண்ட் ப்ரி தடகளப் போட்டி கவுகாத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்த கொண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்