காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (10:55 IST)
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

வடக்கு காஷ்மீரில் உள்ள பந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்தனர்.

அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஏ.கே.ரக துப்பாக்கியும், ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைபற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்