குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சினைக்கு சமாஜ்வாடி முடிவு

Webdunia

திங்கள், 18 ஜூன் 2007 (11:03 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்த சமாஜ்வாடிக் கட்சி, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதி்ல்லை என்று முடிவு செய்துள்ளது.

உ.பி. தலைநகர் லக்னோவில் நேற்று இரவு சமாஜ்வாடிக் கட்சி தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக உட்பட மதவாத கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றிற்கு எதிராக 3வது ஆணியால் வேட்பாளரை நிறுத்தி பலமான போட்டியை அளிக்க சாத்தியமில்லாததால் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்றும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் இன்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 3வது அணி கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு முடிவெடுத்துள்ளது என்றாலும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சிகளின் தலைவர்கள் முலாயம் சிங் யாதவிற்கு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு அதிகாரம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்