குடியரசுத் தலைவர் தேர்தல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia

சனி, 16 ஜூன் 2007 (13:47 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. வருகிற ஜூன் 30 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 4 ஆம் தேதி கடைசி நாள். வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 21 ஆம் தேதி நேதி நடைபெறுகிறது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேரை சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேரும், 4 ஆயிரத்து 120 சட்ட மன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியிலும், சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாநில தலை நகரங்களிலும் வாக்களிக்கலாம்.

தேர்தல் அதிகாரியாக மக்களவை செயலர் ஆச்சாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்