அஸ்ஸால் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்!
மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் அவரை மாநிலங்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்கச் செய்தார்.
மாநிலங்களவையின் உறுப்பினராக 4வது முறையாக மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ஷிவ்ராஜ் பட்டீல், லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், டி.ஆர். பாலு, சுஷில் குமார் ஷிண்டே, சந்தோஷ் மோகன்தேவ், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், உறுப்பினர்கள் எஸ்.எஸ். அலுவாலியா, சீதாராம் யச்சூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அஸ்ஸாம் சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அசோம் கன பரிஷத்தைச் சேர்ந்த குமார் தீபக் தாசும் இன்று உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். (பி.டி.ஐ.)