ராஜஸ்தான் மாநிலத்தில் குச்ஜார் இனத்தினர் நடத்திய போராட்டத்தின் போது அவர்கள் பொது சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் பலத்த சேதம் ஏற்படுத்தினார்கள்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், குச்ஜார் இனத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தேசிய அவமானம் என்று கூறினர்.
ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேச அரசுகள், வன்முறையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.