மும்பை குண்டு வெடிப்பு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Webdunia

செவ்வாய், 5 ஜூன் 2007 (17:23 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என அறிக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு 5 முதல் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தடா நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையின் பல பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று, இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட நூறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை தடா நீதிமன்றம் தொடர்ந்து அளித்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பர்வேஸ் குரேசி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும், சலீம் மிர்ஷா ஷைக் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடா இன்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும் மூன்று பேருக்கு 5 முதல் 14 ஆண்டகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்