சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவது மட்டுமின்றி சுற்றுசூழலையும் கடுமையாக பாதிக்கும் என்று தண்டி சங்கராச்சாரியார் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமனறம் நிராகரித்து விட்டது.

சேது சமுத்திர திட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தண்டி சங்கராச்சாரியார் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே.ஜெயின் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, இன்று விசாரணைக்கு நாள் குறித்திருந்தது.

ஆனால், தண்டி சங்கராச்சாரியார் சார்பில் ஆஜரான வழக்கரிஞர், நீதிமன்ற அமர்வின் வேண்டுகோளுக்கு இணங்க மனுவை திரும்பப் பெருவதாக தெரிவித்ததையடுத்து, அதனை நிராகரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சேது சமுத்திர திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அத்துறையின் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுமாரும், அதற்கு விளக்கமோ, நடவடிக்கையோ எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுமாறும் நீதிபதிகள் கூறினர். ( U N I )

வெப்துனியாவைப் படிக்கவும்