ஓரே நாளில் 21 பேருக்கு தூக்கு!

புதன், 17 ஏப்ரல் 2013 (11:55 IST)
FILE
ஈராக்கில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 21 பேருக்கு ஓரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.

ஈராக்கில் அதிகரித்து தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், தீவிரவாத குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஈராக்கில் குண்டுவெடிப்பு, கொலை குற்றம், கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுப்பட்ட 21 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

உலக நாடுகளில் மிக அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நாடு எனக் கருதப்படும் ஈராக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 447 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு மட்டும் 129 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்