பாரக் ஒபாமாவின் அண்ணன் கென்யா தேர்தலில் போட்டி

வெள்ளி, 18 ஜனவரி 2013 (15:35 IST)
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அண்ணன் கென்யாவிலுள்ள சையா ாகண தேர்தலில் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டை சேர்ந்தவர். அவருக்கு ஒபாமாவின் தயார் உட்பட 4 மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவிக்கு பிறந்தவர் மாலிக் ஒபாமா (வயது 54), கென்யாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு தனது தம்பி பாரக் ஒபாமாவை போல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதை செயல் படுத்த அவர் வசிக்கும் சையா மாகாண தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாலிக் ஒபாமா கூறுகையில், அவரும் பாரக் ஒபாமாவும் 1985 ஆம் ஆண்டு முதல் முறையாக சந்தித்த நாளிலிருந்து இன்று வரை நெருக்கமாக இருந்துவருவதாகவும். தான் இந்த மாகாண தேர்தலில் வெற்றி பெற்றால் 2018 ஆம் ஆண்டு கென்யாவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்