ஸ்லீப்பிங் பியூட்டி; 19 மணி நேரம் தூங்கும் பெண்

செவ்வாய், 20 நவம்பர் 2012 (20:22 IST)
அமெரிக்காவில் தூங்கும் வியாதியால் அவதிப்படும் இளம் பெண். நாளுக்கு 19 மணி நேரம் தூங்குவதால் வாழ்கையில் பல முக்கிய நிகழ்வுகளை தொலைத்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன். இவருக்கு வயது 17. இவர் சிறு வயதிலிருந்தே ஒரு நாளைக்கு 19 மணி நேரமவரை தூங்கும் பழக்கம் கொண்டுள்ளார். இ‌ந்நிலையில் இவருக்கு உள்ளது பழக்கம் இல்லை, ஒரு வியாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வந்துள்ள வியாதி கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அதாவது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறு.

இவர் பல சமயங்களில் நாட்கள் தவறி எழுந்திருப்பது, பிறந்த நாள், தே‌ர்வு என எந்த முக்கிய நிகழ்வையும் சரியாக செய்ய முடிவதில்லை. ஒரு சமயம் கிறிஸ்மஸவிடுமுறையில் தூங்கிய அவர் 64 ம‌ணி நேர‌ம் கழித்துதான் எழுந்ததாக அவரது தாய் சாதாரனமாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்