சாண்டி புயலுக்கு 70 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
வியாழன், 1 நவம்பர் 2012 (16:56 IST)
சாண்டி புயலுக்கு அமெரிக்காவில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கிய சாண்டி புயலால் அங்கு பல மாகாணங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. 120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் மூழ்கியுள்ளன. பல கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்க வரலாற்றில் பெரிய சூறாவளி புயலாக கூறப்படும் இந்த புயலால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
சாண்டியால் இதுவரை நியூஜெர்சியில் 8 பேரும், நியூயார்க்கில் 24 பேரரையும் சேர்த்து இதுவரை அமெரிக்காவில் 70 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் நியூயார்க் ஆளுனர் அன்டூரூ கூமோ தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட 13 மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அட்லான்டிஸ், நியூஜெர்சி மற்றும் நியூயார்க்கில் 940,000 மின் தடங்கல் இயங்காததால் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
அவசர தேவைக்காக மட்டும் இதுவரை இரண்டு விமான நிலையத்தின் சேவை மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.