ஐ.நா.அமைதி படையில் இலங்கை போர்க் குற்றவாளி: நவநீதம்பிள்ளை கேள்வி

செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (13:51 IST)
இலங்கை போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வா, ஐ.நா. அமைதிக்காப்பு படைக்கான ஆலோசனைக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு, அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைதி படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு சவேந்திர சில்வாவை, ஐ.நா.வுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவும் நியமித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்