எகிப்தின் புதிய பிரதமராக கமால் கான்சோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சி மக்கள் புரட்சி மூலம் வீழ்ந்ததை தொடர்ந்து ஆட்சி அதிகாரம் இராணுவ கவுன்சில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில்,இராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியல் சட்டம் மாற்றப்பட்டத்தை தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க இராணுவம் மற்றும் போலீசார் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து இராணுவ கவுன்சில் அமைத்த அமைச்சரவை தனது பதவியை ராஜினாமா செய்தது.
இதனால் நாட்டில் குழப்ப நிலை ஏற்படும் சூழ்நிலை உருவானது.அதை தடுக்கும் வகையில் புதிய அமைச்சரவையை இராணுவ கவுன்சில் அமைக்கிறது.
அதற்கு வசதியாக புதிய பிரதமராக கமால் கான்சோரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முபாரக் ஆட்சியின்போது கடந்த 1996 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர்.
இவர் தலைமையில் விரைவில் அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.