அமெரிக்கா வந்த தலாய்லாமாவுடன் அதிபர் ஒபாமா திபெத் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தியதற்காக அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, திபெத் பிரச்சினை குறித்து இருவரும் பேசினார்கள்.திபெத்தியர்களின் மனித உரிமைகள், மத சுதந்திரம் போன்றவை குறித்து தலாய்லாமாவுடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தலாய்லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசியது குறித்து சீனா கடும் அதிருப்தி அடைந்தது.
இதனையடுத்து பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை சீன அயலுறவுத்துறை அமைச்சகத்திற்கு இன்று நேரில் வரவழைத்த சீன அயலுறவுத் துறை இணையமைச்சர் சுயி டினாஹி, அவரிடம் தனது கடும் ஆட்சேபணையை தெரிவித்தார்.
இத்தகவல் சீன அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.