லண்டனில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததோடு அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான் கூறிய கருத்தில் இருந்து முஷாரப் திடீரென பல்டி அடித்துள்ளார். இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.