சீனாவில் கடும் மழை, நிலச்சரிவு: 127 பேர் பலி, 2000 பேர் காணவில்லை

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2010 (18:11 IST)
சீனாவில் வடமேற்குப் பகுதியான கான்சுவில் பெய்து வரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 127 பேர் பலியாகியுள்ளனர். 2,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

திபெத் பகுதிக்கு உட்பட கான்சு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கன்னான் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக சூகு என்ற பகுதியில் நேற்று இரவு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக பைலாங் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெரும்பாலான மக்கள் சிக்கிக் கொண்டனர் என்றும், வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2,000 பேர் குறித்த தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்