தமிழர் நலனை வலியுறுத்திய யு.எஸ். மீது இலங்கை பாய்ச்சல்

புதன், 12 ஆகஸ்ட் 2009 (14:12 IST)
வன்னியில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன்கள் பற்றி கருத்துக் கூறும் அருகதை அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல காட்டமாக கூறியுள்ளார்.

சிறிலங்காவின் நிலை பற்றி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தெற்காசிய மற்றும் மத்திய ஆசியாவிற்காக அமெரிக்காவின் உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் , வரும் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தல்வரைக்கும், அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை இலங்கை அரசு முன்வைக்காவிட்டால் , அது தமிழ் மக்களை தாமும் இத்தீவின் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்கள் அல்ல என்றும் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய, பிளேக் இவ்வாறான கருத்து சொல்ல தகுதி அற்றவர் என்றும், இலங்கை மக்கள் தாம் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும் என தெரிந்து வைத்துள்ளதாகவும், தற்போது முகாமில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்