மலேசியாவில் யோகா பயிற்சி: முஸ்லிம் அமைப்பு தடை!

சனி, 22 நவம்பர் 2008 (17:57 IST)
ோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள தேசிய ஃபட்வா கூட்டமைப்பு, முஸ்லிம்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது என புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட யோகா பயிற்சியை மேற்கொள்வது, முஸ்லிம் மதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காலப்போக்கில் அழித்துவிடும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபட்வா கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ஷுகோர் ஹுஸின் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலக முழுவதும் யோகா பயிற்சி செய்து வரும் முஸ்லிம்கள் அப்பயிற்சியின் பிரதான நோக்கத்தை உணராமல் பயிற்சி செய்கின்றனர்.

ஹிந்து மதத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த யோகா பயிற்சி, உடற்கூறு மற்றும் மத நம்பிக்கைகள், வழிபாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து கடவுளை அடைவதற்கான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் முஸ்லிம் மதத்தின் மீதுள்ள நம்பிக்கை ஒழிக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்