துணை அதிபர் பதவிக்கு போட்டியிட அழைத்தார்கள்: பாபி ஜிண்டால்!

புதன், 12 நவம்பர் 2008 (17:53 IST)
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தன்னைப் போட்டியிடும்படி குடியரசுக் கட்சி கேட்டுக் கொண்டதாக லூசியானா மாகாண ஆளுநராக உள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எம்.எஸ்.என்.பி.ஸி என்ற நிறுவனத்திற்கு ஜிண்டால் அளித்துள்ள பேட்டியில், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும்படி தன்னை அக்கட்சியினர் கேட்டுக் கொண்டனர். எனினும், எனக்குத் தேவையான பதவியில் தற்போது இருப்பதால் அவர்களின் வேண்டுகோளை அன்புடன் மறுத்தது விட்டேன் எனக் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவழித் தொழிலதிபரான பாபி ஜிண்டால் கடந்த ஆண்டு லூசியானா மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றார். குடியரசுக் கட்சியின் பிரபலமான இளம் தலைவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள இவர், அடுத்தடுத்த தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இடம்பிடிப்பார் என அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்