நிதி நெருக்கடியை எதிர்கொள்ள ஆயத்தம் - ஒபாமா!

ஞாயிறு, 9 நவம்பர் 2008 (03:12 IST)
அமெரிக்காவின் புதிய அதிபராக தாம் வரும் ஜனவரி மாதம் பதவியேற்பதற்கு முன்பாகவே நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உரிய திட்டங்களை வகுக்க இருப்பதாக, பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக வானொலியில் உரையாற்றுகையில் ஒபாமா இதனைத் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியைத் தீர்ப்பதில், நேரத்தை வீணடிக்காமல் தாம் செயல்பட விரும்புவதாகவும், ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றதில் இருந்தே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

நிதிநெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள குழு ஒன்றை நியமிப்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும், ஜனவரி மாதத்திற்கு பின் இக்குழு செயலாற்றும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக வெள்ளியன்று தனது பொருளாதார ஆலோசகர்களைச் சந்தித்துப் பேசிய பின் பேட்டியளித்த ஒபாமா, பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைவரின் ஆதரவும் அவசியம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்