பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சென்ற ரயிலில் குண்டுவெடித்ததில் 3 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தண்டவாளத்தின் நடுவே வைக்கபட்டிருந்த குண்டு வெடித்ததில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாகவும், இதில் மேலும் 15 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் ஜியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் உள்ள பாவல்பூர் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம்புரண்ட 2 ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய ஏராளமானோரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும், காயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகள் விக்டோரிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் குண்டுவெடிப்புக்கு அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.